பிரதான ஆசாரியரே (பாகம்1)

https://www.tamilchristianassembly.de/music/album/166/joseph-aldrin/pirathaana-aasariyarae-vol-1


ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே
தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே
அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே
தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லுல
என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவுல என் நடத்தயில
என் உணர்வுல என் உயிரில கலந்திருக்கீங்க
அன்பின் ஆவியானவரே
விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா


நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்

உம்மை போற்றுவேன்
உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன்
உம்மை ஆராதிப்பேன்
துதிகனமகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே – எங்கள்

என் விண்ணப்பத்தின்
சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்

என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
போஷித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா  – வார்த்தையால்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்


தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

மலைபோல துன்பம் எனை சூழும் போது
அதை பனிபோல உருகிட செய்பவரே
கண்மணி போல என்னை காப்பவரே
உள்ளங்கையில் பொறிந்தென்னை நினைப்பவரே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றீர்
நிழல் போல என் வாழ்வில் வருபவரே
விலகாமல் துணை நின்று காப்பவரே 
நீர் போதும் என் வழ்விலே – இயேசைய்யா

ஒரு தாய்போல பாசம் தந்தை போல நேசம்
ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
உம்மை போல புரிந்து கொண்டது யாருமில்லையே
உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே
நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா


பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே
யேஷுவா  x 8

எங்கள் பிரதான ஆசாரியரே
பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால்
என்றென்றும் பூரணப்படுத்தினீரே
எங்கள் பிரதான ஆசாரியரே
யேஷுவா x 8
எங்கள் பிரதான ஆசாரியரே

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற
கிருபாசனத்தண்டையில்
தைரியமாய் வர
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே
யேஷுவா x 8 
எங்கள் பிரதான ஆசாரியரே

தோளிலே எங்களை சுமப்பவரே
இதயத்தில் எங்களை பொறிந்தவரே
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே
யேஷுவா x 8
எங்கள் பிரதான ஆசாரியரே

பாவம் இல்லாத ஆசாரியரே
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே
யேஷுவா x 8
எங்கள் பிரதான ஆசாரியரே

பிரதான ஆசாரியரே எங்கள்
பிரதான ஆசாரியரே

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்
கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது
மலைகள் விலகினாலும் கிருபை விலகாதைய்யா
கிருபை விலகாதைய்யா – இயேசையா உம்

கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர்
கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்  – என்மேல்
பாவங்களை மன்னீத்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை
இயேசு எனக்காய் பலியானதனால் 
கிருபை விலகாதைய்யா – இயேசையா உம்

நீதியினால் நான் ஸ்திரப்படுவேன்
கொடுமைக்கு நான் தூரமாவேன்
பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன்
எதுவும் என்னை அணுகுவதில்லை
கிருபை விலகாதைய்யா – இயேசையா உம்

எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர்
எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை
குற்றப்படும்படி செய்திடுவீர்
கிருபை விலகாதைய்யா – இயேசையா உம்

மனிதர்கள் விலகினாலும் நம்பினோர் கைவிரித்தாலும்
கிருபை விலகாது சமாதானம் நிலைபெயராது
மலைகள் விலகினாலும்

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)
அசைவுற விடமாட்டீர் –  என்னை

எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன்
அசைவுற விடமாட்டீர் –  என்னை

கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே
அசைவுற விடமாட்டீர் –  என்னை

என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
அசைவுற விடமாட்டீர் –  என்னை

தலை சாய்க்கும் கல் நீரைய்யா
மூலைக்கல் நீரய்யா
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு
பரம்புவாய் என்றீரே
பூமியின்  தூளைப்போல் உன் சந்ததி
பெருகும் என்று வாக்குரைத்தீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

பூமியின் வம்சங்கள் உனக்குள்
உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று
ஆசீர்வாத வாய்க்காலாக
என்னை மாற்றினீரே
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
என்னை கனப்படுத்துவீர்
தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
என்னை காப்பாற்றுவீர்
சொன்னதை செய்யுமளவும்
என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்

உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்

இயேசையா இயேசையா இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது

ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் – என்னை

நண்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான்
கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்
அவரே என்னை ஆதரிப்பார்
கர்த்தரையே நான் நம்பிடுவேன்
ஒருபோதும் தள்ளாட விட மாட்டார்

உஷ்ணம் வருவதை பாராமல்
என் இலைகள் பச்சையாய் இருக்கும்
மழை தாழ்ச்சியான வருஷங்களிலும்
வருத்தமின்றி கனி கொடுக்கும்
என் வேர்கள் தண்ணீருக்குள்
என் நம்பிக்கை இயேசுவின் மேல்

நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு
என் காலத்தில் கனியைக் கொடுப்பேன்
இலையுதிரா மரம் போல் இருப்பேன்
நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்
உம் வேதத்தில் பிரியம் கொண்டு
அதை இராப்பகல் தியானிப்பதால்

உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை
என் வழியை வாய்க்கச் செய்திடுவேன்
புத்திமானாய் நடந்து கொள்வேன்
என் வாய்விட்டு பிரிவதில்லை
அதை தியானிக்க மறப்பதில்லை

ஆட்டுக்குட்டியானவரே
எனக்காக பலியானீர்
ஆட்டுக்குட்டியானவரே
என் பாவங்கள் சுமந்தீர்
உமக்கே எங்கள் ஆராதனை

பரிசுத்தம் உள்ளவர் நீர்
பாவமாய் மாற்றப்பட்டீர்
நீதிமானாக என்னை மாற்றினீர்
கிருபையால் இலவசமாய் நீதிமானேனே
சிலுவை மரணத்தில்
என் பாவங்கள் நீங்கியதே

கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்
ஆசீர்வாதமாக என்னை மாற்றீனீர்
ஆசீர்வாதமானேனே (நீர்)
எனக்காய் சாபமானதனால்
சிலுவை மரணத்தில் (என்)
என் சாபங்கள் நீங்கியதே

ஐஸ்வர்யம் உள்ளவர் நீர்
எல்லாமே இழந்தீரே
எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே
செல்வந்தனாய் ஆனேனே
நீர் ஏழ்மையானதனால்
சிலுவை மரணத்தில்
என் தரித்திரம் நீங்கியதே

என் பாவம் யாவையும்
உடலிலே சுமந்தீரே
உம் சுகத்தை என் உடலில் தந்தீரே
பாவத்தின் விளைவுகளை உம்
மரணத்தால் வென்றீரே
காயங்களால் நான் சுகமனேனே – உம்

வல்லமையும் பெலனும்
ஞானமும் ஐஸ்வர்யமும்
மகிமையும் ஸ்தோத்திரமும்
உமக்கே உரியதே

இயேசுவே இயேசுவே
ஆட்டுக்குட்டியானவரே – எங்கள்
எங்கள் இயேசுவே எல்லா
மகிமைக்கும் பாத்திரரே

Leave a Reply