என்னை மறவா இயேசு நாதா
இருள் சூழும் காலம்
மாறாத அன்பு
போற்றித் துதிப்போம்
யார் வேண்டும் நாதா
யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ (2)
பாழாகும் லோகம் வேண்டாமைய்யா
வீணான வாழ்க்கை வெறுத்தேனைய்யா (2)
உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ (2)
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும் (2)
சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா (2)
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால் (2)
என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால் (2)
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின் பாதம் சரணடைந்தேன் (2)
இயேசுவே உம் நாமத்தினால்
இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந் நாளிலே
எங்கள் தேவனே
எங்கள் இராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் வாழ்ந்திடுவோம்
பொன்னை நாடி மண்ணை அடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றம் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயத்தைப் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்
(எங்கள் தேவனே……)
உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ பாவியே நீ
இன்று இயேசுவண்டை வாராயோ
சாகா ஜீவன் கண்டடைய
(எங்கள் தேவனே….)
Salvationarmy Erachakulam – Message Agathiyan
Song: En Vaazhvil Ellamae
உறக்கம் தெளிவோம்
வாய்ப்பைத் தவறவிட்டவள் !
…