யார் வேண்டும் நாதா
யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ (2)
பாழாகும் லோகம் வேண்டாமைய்யா
வீணான வாழ்க்கை வெறுத்தேனைய்யா (2)
உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ (2)
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும் (2)
சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா (2)
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லால் (2)
என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால் (2)
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின் பாதம் சரணடைந்தேன் (2)