Uyirodu Elunthavare – உயிரோடு எழுந்தவரே
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா
மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா
En indhayam Sollum – என் இதயம் சொல்லும்
என் இதயம் சொல்லும்
என் உதடும் பாடும்
நீர் மட்டும் உண்மை அன்பு என்று
உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்
கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே
இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
என் கூடவே இருந்து தேற்றினீரே
Ennila Adangatha – எண்ணில்லடங்காத ஸ்தோத்திரம்
எண்ணில்லடங்காத ஸ்தோத்திரம் சுவாமி
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
வானாதி வானங்கள் யாவும்
அதின் மேலுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
சுவாமி உம்மைப் போற்றுமே
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே
நீரினில் வாழ்கின்ற யாவும்
இந் நிலத்தின் ஜீவராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே