Ennila Adangatha – எண்ணில்லடங்காத ஸ்தோத்திரம்
எண்ணில்லடங்காத ஸ்தோத்திரம் சுவாமி
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
வானாதி வானங்கள் யாவும்
அதின் மேலுள்ள ஆகாயமும்
பூமியில் காண்கின்ற யாவும்
சுவாமி உம்மைப் போற்றுமே
காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனி தூறலும்
பூமியில் காண்கின்ற யாவும்
கர்த்தா உம்மைப் போற்றுமே
நீரினில் வாழ்கின்ற யாவும்
இந் நிலத்தின் ஜீவராசியும்
பாரினில் பறக்கின்ற யாவும்
பரனே உம்மைப் போற்றுமே
Leave a Reply
You must be logged in to post a comment.