பரலோக சங்கீதம் (பாகம் 1)

https://www.tamilchristianassembly.de/music/album/48/levlin-samuel/paraloga-sangeetham-vol-1


கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்
சந்தோசமாய் இருங்கள்
ஓன்றுக்கும் நீங்கள் கவலைப்படாமல்
தேவனுக்குத் தெரிவியுங்கள்

இயேசு நல்லவர் அன்பு உள்ளவர்
மனதுருக்கம் உடையவரே
எங்கள் ஜெபங்களை அவர் கேட்பவர்
பதில் நிச்சயம் தருவாரே

எல்லாப் புத்திக்கும் மேலான
தேவ சமாதானம் இருதயத்தை
இயேசுக்கிறிஸ்துவின் சிந்தையால்
நம்மை நிரப்பிக் காத்துக் கொள்ளும்

இயேசுவானவர் மகிமையின்
நம்பிக்கை நமக்குள்ளே
அவர் இருப்பதால் பயமில்லையே
தேவன் என் துணையே


இரத்தத்தால் என்னை மூடிக்கொள்ளும்
இரத்தத்தால் என்னை மறைத்துக் கொள்ளும்
இயேசுவின் இரத்தம் எங்கள் பாதுகாப்பு
இயேசுவின் இரத்தம் ஜெயம் தருமே

கல்வாரி இரத்தம் என் மேலேயுள்ளது
மின்னும் சுடரொளிப் பட்டையமே
சாத்தான் என்னை நெருங்காமல்
அக்கினி வேலி அடைத்துக் கொள்வேன்

எகிப்திலே சங்காரம் நடந்தபோது
இஸ்ரவேல் ஜனங்களை மீட்ட இரத்தம்
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்த்த
தேவாட்டுக் குட்டி இயேசு இரத்தம்

பஸ்காவின் இரத்தம் பரிசுத்தமானது
வீடுகள் நிலைக்காலில் பூசிக் கொள்வோம்
எங்கள் குடும்பங்கள் சபைகளில் தெளித்துக்கொள்வோம்
பாளயம் முழுவதும் காவல் செய்வோம்


நன்றி நன்றி நன்றி என் இயேசு தேவா நன்றி
நீர் செய்த எல்லா நன்மைக்காய் நன்றி

நன்றி மறவாத இதயத்தைத் தாரும்
நாள்தோறும் உம்மைத் துதிக்க வேண்டுறேன்

இன்றும் நாங்கள் உம்மைத் தேடிவந்தோம் தேவா
நல்லாசி கூறி ஆசீர்வதியும்

பெலவீனன் என்று தள்ளிவிடாமல்
எனக்காய் பரிந்து பேசும் ஆசாரியர் நீரே


சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேராபீன்கள் கேரூபீன்கள் வாழ்த்தும் பரிசுத்தர் பரிசுத்தரே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

பட்சிக்கும் அக்கினி பாவங்களைத் தண்டிக்கும்
பரிசுத்த தேவன் அவரே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

பயப்படுவோம் இயேசு நாமத்திற்கு
நாங்கள் நடுங்குவோம் அவர் வசனத்திற்கு
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா

தேவ மகிமை சூழட்டுமே
தேவ கிருபை தாங்கட்டுமே
அல்லேலூயா யேகோவா அல்லேலூயா யேகோவா


சிங்காசனத்தில் வீற்றிருப்பார் தேவன் இயேசுக்கிறிஸ்து
துதிகனம் மகிமையெல்லாம் அவருக்கே செலுத்திடுவோம்

ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தர் ஆட்டுக்குட்டி ஆனவரே
உன்னதமானவரே உலகத்தின் ஒளி நீரே

தேவன் சபையில் வாசமாகி நடுவிலே உலாவுகின்றார்
அற்புத தேவன் நீரே அதிசயமானவரே

இயேசுவின் நாமத்தில் பிதாவே உம்மை தொழுகிறோம் பணிந்திடுவோம்
சர்வ வல்லவரே பரிசுத்தமுள்ளவரே


இயேசுவை அறைந்தார்கள் சிலுவையிலே
ஆணி அடித்தார்கள் கரங்களிலே
முள்முடி சூட்டி வாரினால் அடித்து
குத்தினார் விலாவிலே

கொல்கதா மலையில் குமாரன் இயேசு
திருரத்தம் சிந்தினார்
என் பாவம் நீங்கி சுகமாய் நான் வாழ
ஜீவ பலியாகினார்

நல்லோர்கள் மேலும் தீயோர்கள் மேலும்
நன்மைகள் செய்யும் தேவன்
அடிமையின் ரூபம் தாழ்மையின் கோலம்
எனக்காக எடுத்து வந்தார்

என் நோய்கள் சுமந்தார் வியாகுலம் அடைந்தார்
ஆத்தும மீட்பரே
கல்வாரி அன்புக்கு நிகரொன்றும் இல்லை
என்னைத் தாழ்த்திடுவேன்


மணவாளன் வரும் நேரம் மணவாட்டி சபையே – நீ
விழித்திருந்தால் பாக்கியமே புத்தியுள்ள கன்னிகைபோலாவாய்

ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு
அழைக்கப்பட்டோர்கள் பாக்கியவான்கள்
நேசர் வந்து கதவைத் தட்டும் நேரத்தில் விழித்திருப்போர்
பாக்கியவான்கள் பாக்கியவதிகள்

ஏழு பொன் குத்துவிளக்கின் மத்தியிலே உலாவும்
மனுஷ குமாரன் சீக்கிரம் வருகிறார்
நியாயம் செய்யும் தேவன் வாசலில் வந்துவிட்டார்
விழித்திருப்போமே வானைநோக்கியே


பரலோக சந்தோஷம் பாரினில் வந்து
என்னைப் பரவசப்படுத்துகிறதே
பரமபிதா நீர் எந்தன் தந்தை
பாவி நான் உந்தன் பிள்ளை ஆனேன்

புத்திர சுவீகார ஆவியினால்
நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்
புரியாத உணர்வாலே எனைத் தேற்றுவீர்
அது உன்னத பெலன் அல்லவா

என் பிரிய இயேசு என் இனிய நேசர்
என்னோடு இருப்பார் என்றும்
ஜீவ ஒளியாக எந்தன் இருள் வாழ்வில் வந்தார்
தெய்வீகமான அன்பே

பரலோகம் எனக்குள் உருவாகுதே இங்கே
அந்தப் பரமனைக் கண்டுகொண்டேன்
அவர் திருவாய் மொழி எனக்கு அருமருந்தாகுமே தினமும்
பலகோடி துதி பாடுவேன்


கர்த்தர் நம்மோடு இருக்கின்றார்
அச்சமில்லை பயமில்லை தோல்வியில்லையே

இஸ்ரவேலின் இராணுவத்தின் தேவன் அவரே
நமக்காய் யுத்தம் செய்யும் அதிபதியே
சாத்தானை ஜெயம் கொண்ட எங்கள் இயேசு
சர்வ வல்லமை உடையவரே

வானத்திலும் பூமியிலும் அதிகாரங்கள்
நமக்காய் தந்தவர் அவரல்லவா
விசுவாசம் என்னும் கேடகத்தைப் பிடிப்போம்
ஆவியின் பட்டயம் என்றே

நாங்கள் ஜெப சேனையாய் எழும்புவோம்
எரிகோ மதில் எழுந்து நின்றால் என்ன
யூதாவின் துதியினால் இடிந்துவிழும்
பார்வோனின் சேனைகள் சூழ்ந்தால் என்ன

செங்கடலைக் கடந்து முன்னேறுவோம்
அக்கினி ஸ்தம்பம் வரும் மேக ஸ்தம்பம் வரும்
முன்னும் பின்னும் அவர் சமூகம்
நாங்கள் எக்காளம் ஊதிச்செல்வோம்


Leave a Reply