ஆயத்தமா (பாகம் 1)

https://www.tamilchristianassembly.de/music/album/37/ravi-bharath/aayathamaa-vol-1


ஆயத்தமா ஆயத்தமா
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா

மணவாட்டி போல நீ காத்திருந்தால்
அவர் நாமத்தை தினமும் போற்றிருந்தால்
மேகங்கள் மீதினில் வந்திடுவார் – உன்னை
மோட்சத்துக்கழைத்து சென்றிடுவார்
புவியை வெறுத்திட ஆயத்தமா
அந்தப் பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா

நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் – உன்
பாவங்கள் இன்று தலை தூக்கினால்
பரலோக கனவுகள் பாழாகுமே – உந்தன்
பாடுகள் அனைத்துமே வீணாகுமே
நேற்றைப் போல் இன்றும் நீ ஆயத்தமா – அட
இன்று போல் நாளையும் ஆயத்தமா


அந்த சூரியன் அந்த சந்திரன்
இந்த பூலோகம் யாவும்
அந்த மழைத்துளி இந்த பனித்துளி
இயற்கை அழகு யாவும்
படைப்பே உந்தன் படைப்பே
அதை நினைத்து மனம் மகிழ்ந்து
உம்மை வாழ்த்திடுவேனே

வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும்
தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும்
மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும்
நீரே தேவன் எல்லாம் உம் கைவண்ணமே

மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர்
கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர்
விழுந்தாலும் எழுப்பிவிட்டீர் அழுதாலும் துடைத்துவிட்டீர்
கண்ணீரை இதயத் துடிப்பும் நீரே


இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம்

உலகத்தின் பொய்யான அன்பும் வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தெய்வ அன்பு உன்னை தாலாட்டுமே

பொன்னும் பொருளும் நம்மோடு மண்ணில் சேராதே
தெய்வ அன்பு மட்டும் நம் சொந்தமே – நம்
ஜீவனைக் காக்கும் மாமருந்தே

அவரை நேசித்தால் அவரை போல மாறிடுவோம்
இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்


எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா

கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்திரித்தது
அல்லேலூயா அல்லேலூயா

பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்ந்தது
கர்த்தரை மனமும் போற்றியது
அல்லேலூயா அல்லேலூயா

வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய்  உயிர் கொடுத்தாரே
அவரை  உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா

யோர்தானைக் கடந்தோம் எரிகோவை தகர்த்தோம்
ஜெயம் கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா


ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே அப்பா அப்பா
உம் கிருபை எனக்கு போது அப்பா அப்பா
நல்லவரே வல்லவரே

கர்த்தரே என் கன்மலையும் கோட்டையுமானார்
ரட்சகரும் தேவனுமானார் – நான்
நம்பின என் துருகமும் கேடகமானார்
ரட்சணிய கொம்புமானார்

தேவரீர் என் இருளையெல்லாம் வெளிச்சமாக்கினீர்
எனது விளக்கை ஏற்றி வைத்தீர் – ஒரு
சேனைக்குள்ளே பாயச்செய்து போரிடச் செய்தீர்
மதிலையெல்லாம் தாண்டிடச் செய்தீர்

உம்முடைய வலக்கரத்தால் என்னை தாங்கினீர் – உம்
காருணியத்தால் பெரியவனானேன்
நான் செல்லுகின்ற பாதையெல்லாம் அகலமாக்கினீர்
வழுவாமல் நடந்து செல்கிறேன்


பிதாவே போற்றி
குமாரன் போற்றி
ஆவியே போற்றி
போற்றி போற்றி

யேகோவாயீரே போற்றி போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யேகோவாநிசியே போற்றி போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர்

யேகோவா ஷாலோம் போற்றி போற்றி
சமாதானம் தருகின்றீர்

யேகோவா ராப்பா போற்றி போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர்

யேகோவா ஷம்மா போற்றி போற்றி
கூடவே இருக்கின்றீர்


யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்

உலகம் அழைக்கிறது – உம்
நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா

இச்சைகள் இழுக்கிறது – உம்
சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே

இரட்சிப்பு விளையாட்டா – நம்
இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா


நேற்று இன்று நாளை மாறாதவரே
காலம் மாறினாலும் மாறாதவரே

வாக்குத்தத்தம் கொடுத்தால் – அதை
நிறைவேற்றிடுவார்
நம்மைப் போல அல்ல – அவர்
கண்டதையும் சொல்ல

சொல்வதெல்லாம் உண்மை – அவர்
செய்வதெல்லாம் நன்மை
பொய்கள் கிடையாது – அவர்
செய்கை புரியாது

தாழ்பாள்களை முறித்தார் – வெண்கல
கதவினை உடைத்தார்
இன்றும் அதைச் செய்வார் – உன்னை
விடுவித்து காப்பார்

பாவம் நீங்கிப்போனதே – வாழ்வில்
விடுதலை வந்ததே
செய்ததெல்லாம் அவரே – இன்றும்
அதைச் செய்வாரே


உலகம் தோன்றும் முன்னே உன்னை
தெரிந்துகொண்டாரே தேவன்
கருவினில் உருவாகும் முன்னே உன்னை
பிரித்தெடுத்தாரே தேவன்
கிறிஸ்து உனக்காய் அடிக்கப்பட்டார் உன்
பாவங்களுக்காக நொறுக்கப்பட்டார்
ஆவியாய் கூடவே இருக்கின்றார்
உனக்காய் பரிந்து பேசுகிறார்


வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்

உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
உன் கஷ்டங்கள் அறிவார்
உன் கண்ணீரை அறிவார்
உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்

உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
முழுதான மனதோடு துதியோடு

உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
பதறாதே தயங்காதே மயங்காதே

Leave a Reply