ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் (பாகம் 1)

https://www.tamilchristianassembly.de/music/album/42/s-j-berchmans/jebathotta-jeyageethangal-vol-1

கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2

என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்

என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன்

சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார்

பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன்

மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பார்


சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே, குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார்

எதிரிகள் முன் விருந்தொன்றை ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கின்றார்

ஆத்துமாவை தேற்றுகின்றார் ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம் கிருபை என்னைத் தொடரும்

என் தேவன் தம்முடைய மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கி நடத்திடுவார்


இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

உன்னை நானே தெரிந்துகொண்டேனே
உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன் – வழியும்

தாய் மறந்தாலும் நான் மறவேனே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

துன்பநேரம் சோர்ந்துவிடாதே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போது
மூழ்கி போக மாட்டாய்


ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போமாட்டேன் – உம்மைவிட்டு
அகன்று போகமாட்டேன்

ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்

வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்

வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்

நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு

தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமதுவாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்


கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்

முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ

கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ

காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் – உன்னை

உலகத்தின் வெளிச்சம் நீ
எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம் – தம்பி (நீ)
மறைவாக இருக்காதே

உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும்

உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்


நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே

என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே

அருகில் வந்தாரே
மனது உருகினாரே

இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே

எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே

காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே

சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே

மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே


வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்

வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே

ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்

காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்க பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்

கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்


ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது

ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்

உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்

உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்

கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்

வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்


நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயா

காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா

வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா

ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டு – ஐயா

அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே


உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்க்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்க்கின்றேன்

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்கமாட்டார்
இஸ்ரவேலைக் காக்கிறவர்
எந்நாளும் தூங்க மாட்டார்

கர்த்தர் என்னைக் காக்கின்றார்
எனது நிழலாய் இரக்கின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாதுகாக்கின்றார்

கர்த்தர் எல்லாத் தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காக்கின்றார்
அவர் எனது ஆத்துமாவை
அநுதினம் காத்திடுவார்

போகும்போதும் காக்கின்றார்
திரும்பும்போதும் காக்கின்றார்
இப்போதும் எப்போதும்
எந்நாளும் காக்கின்றார்


இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத்தானானா

நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்துபோன உள்ளத்தை தேற்றிடுவார்

வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்

கடன்தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்


பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா

உதவி வருகிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்

உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்


ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

Leave a Reply