ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் (பாகம் 2)

https://www.tamilchristianassembly.de/music/album/145/s-j-berchmans/jebathotta-jeyageethangal-vol-2

மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை – என்
அன்பர் இயேசுவுக்கே

விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்

வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே

எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக

மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

நல்லவர் சர்வ வல்லவர் – நீர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 

மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா

எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா

சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா

எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்

தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன்தந்தார் ஆவியாலே – எனக்கு

உறுதியாய் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே – தினமும்

அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமை உள்ள தேவா
வரங்களின் மன்னவனே – தேவா

கூப்பிட்டேன் பதில் வந்தது
குறைவெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா அவர்
மகத்துவமானவரே – இயேசு

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களி கூருவேன்

ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

மந்தையிலே ஆடுகளின்றிப்போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்

என் கிருபை உனக்குப் போதும்
பலவீனத்தில் என் பெலமோ
பூரணமாய் விளங்கும்

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
எனக்கே நீ சொந்தம்
பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம்

உலகத்திலே துயரம் உண்டு
திடன்கொள் என் மகனே
கல்வாரி சிலுவையினால்
உலகத்தை நான் ஜெயித்தேன்

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
இருக்கின்ற பெலத்தோடு
தொடர்ந்து போராடு

எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நீ போவதில்லை
கலங்கினாலும் மனம் முறிவதில்லை
கைவிடப்படுவதில்லை

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே

இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே

துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே

உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்

விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்

அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்

அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்

செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்

என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே
 
மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத்தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
 
தனிமை வாட்டும்போது – நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
 
வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ…
 
இலவலசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
 
ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை
 
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
 
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக்கொண்டேன்
உலகத்தில் வெற்றி கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே
அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை

உம்வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்தவரே
நன்றி நன்றி ஐயா
வல்லவரே நல்லவரே
ஆராதனை ஆராதனை

பலியான செம்மறி
பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே
பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேன் ஐயா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வோன்
நிச்சயம் நிச்சயம்
இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
 
உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய்
 
ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு
 
கர்த்தருக்குள் நம்பாடுகள்
ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன்
அதிகமாய் செயல்படுவோம்
 
நம்முடைய குடியிருப்பு
பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை
எதிர்நோக்கி காத்திருப்போம்

Leave a Reply